Sunday, July 10, 2011
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ‘வைரத்தின் நிழல்கள்’, சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28. வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு, வரும் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடுகிறது. இதில், மலேசிய கவிஞர்கள் சி.மா.இளங்கோ, வே.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வைரமுத்து விருது வழங்குகிறார். விழாவுக்கு மலேசிய அமைச்சர் சுப்ரமணியம், கூட்டுறவு காவலர் டான்ஸ்ரீ சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் முன்னிலை வகிக்கின்றனர். மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம், நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் தலைமை தாங்குகிறார்.