Sunday, July 10, 2011
விண்ணைத்தாண்டி வருவாயா' இரண்டாம் பாகம் பற்றி விரைவில் அறிவிக்கிறேன் என்று சிம்பு டுவிட்டில் போட்டிருந்தார். |
இதை தொடர்ந்து 'சும்மா சிம்பு உளறுகிறார்' என்று பத்திரிகைகளுக்கு பகிரங்கமாக அறிக்கை அனுப்பி இருந்தார் கௌதம் மேனன். இப்போது மேலும் ஒரு நட்சத்திர டுவிட், ஃபாக்ஸ் ஆபீஸ் ஹீரோ சூர்யாவால் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறாம். கோடம்பாக்கத்தின் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி தற்போது சூர்யா-முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் '7ஆம் அறிவு' படத்தை எடிட் செய்து வருகிறார். நேற்று இவர் தனது டுவிட்டரில் '7ஆம் அறிவு' படத்தை தற்போது எடிட் செய்து கொண்டிருக்கிறேன். சிக்ஸ் பேக்ஸில் அசத்துகிறார். நடிப்பிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நாம் பார்ப்பது சூர்யா நடித்த படமா இல்லை புரூஸ்லீ நடித்த படமா என்று ஒரு கணம் சந்தேகம் வந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் க்ளைமாக்ஸ் குங்பூ சண்டைக் காட்சியை உலகத்தரத்துக்கு வடிவமைத்து இருக்கிறார்", என்று எழுதிவிட, டுவிட்டரை முதலில் படித்த சூர்யாவின் ரசிகர் மன்றத் தலைவரும், தயாரிப்பாளருமான ஞானவேல் இதை உடனடியாக சூர்யாவின் காதில் போட்டாரம். உடனடியாக டுவிட்டரைப் படித்த சூர்யா இப்படி க்ளைமாக்ஸில் என்ன இருக்கு என்பதை சொல்லி விட்டீர்களே என்று பொறிந்து தள்ளி விட்டாராம். ஆண்டனி இன்னும் கொஞ்சநாளைக்கு டுவிட்டர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள். |