Sunday, July 10, 2011
பெயர் வைக்கப்படாத படத்திற்காக டைரக்டர் பிரபு சாலமன் மிகவும் சிரமபட்டு தயாராகி வருகிறார். |
இளைய திலகம் பிரபுவின் மகனை நாயகனாக நடிக்க வைக்க பிரபு சாலமன் முடிவு செய்ததும் கோலிவுட் பட வட்டாரம் வாழ்த்தி மகிழ்ந்தது. டைரக்டர் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' படக்கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் லட்சுமி மேனன் முக்கியமான ரோலில் நடிக்கிறார். சமீப காலமாக வனப்பகுதியிலிருந்து யானைகள் ஆவேசமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து சேதம் விளைவிப்பதை பற்றி தகவல்கள் வெளியாகி வருகின்றன. யானைகள் ஏன் காட்டை விட்டு, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன என்பதற்கான காரணங்களை கதையில் சொல்லியிருக்கிறோம். ஆட்டம் போடும் யானைகளை கட்டுப்படுத்தி, காட்டுக்குள் வாழ அனுப்பி வைப்பதை பற்றியும் கவலைப்பட்டுள்ளோம். ஆறு மாதங்களாக இப்படத்திற்கு பொருத்தமான நாயகனை தேடி வந்தேன். நீண்ட தேடலுக்கு பிறகு இளையதிலகம் பிரபு சாரின் மகனை பார்த்தேன். என் கதைக்கு பொருத்தமான நாயகனாக தெரிந்தார். விக்ரம் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தின் நாயகன் கதாபாத்திரத்திற்காக விக்ரம் தயாராகி வருகிறார். கேரளாவில் யானைகளை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக கிளம்பியுள்ளார் என்று டைரக்டர் பிரபு சாலமன் கூறியுள்ளாராம். |