Sunday, 10 July 2011
ரசிகர்களின் கைதட்டல் ஓட்டாகும் என்று நினைத்தார் வடிவேலு தப்பாக முடிந்துவிட்டது:சிங்கமுத்து
Sunday, July 10, 2011
முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னென்ன வாக்குறுதிகள் அளித்துள்ளாரோ அவை அனைத்தையும் அச்சு பிசகாமல் ஆணித்தரமாக நிறைவேற்றுவார். இதற்கு அவர் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தி வரும் திட்டங்களே சாட்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதா அப்பாவி ஏழை மக்கள் யார் மீதும் பொய் வழக்கு போடமாட்டார். ஏழைகளின் நிலத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் வடிவேலுக்கு இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. என்னை போன்றவர்கள் எழுதி கொடுத்த வசனங்களை பேசி நடித்து மக்களிடம் கைதட்டல் வாங்கியதை வைத்து மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக கருதினார்.
நகைச்சுவை நடிகர்களுக்கு இனம், மொழி கிடையாது. யார் நடித்தாலும் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அந்த கைதட்டலை பார்த்து தான் சொன்னால் தமிழக மக்கள் ஊழல் ஆட்சிக்கு மீண்டும் ஓட்டுபோடுவார்கள் என்று வடிவேலு கணக்கு போட்டது தப்பாக முடிந்து விட்டது. நடிகர் விஜயகாந்த் குடிகாரர் என்று வடிவேலு பிரச்சாரம் செய்தார். ஆனால் வடிவேலு மொடாக்குடிகாரர் என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு சிங்கமுத்து கூறினார்.
நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, அவர் நடிக்கிறாரா?'' என்று திருப்பி கேட்டார். வடிவேலு இடத்தை நிரப்பும் வகையில் அவர் போல் நடிப்பீர்களா?' என்று கேட்டபோது, தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாக விரும்பவில்லை. தற்போது திரைத்துறையில் அவரை விட சிறந்த காமெடி நடிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.