இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் அவர்கள் அளித்த மனு விவரம்:
எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அப்படத்தை திரையிடுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அய்யப்பன் என்பவரின் மூலம் அட்வான்ஸ் தொகை கொடுத்தோம். இதில் ரூ. 1 கோடியே 55 லட்சத்து 16 ஆயிரத்து 431-ஐ சன் பிக்சர்ஸ் சார்பாக எங்களுக்கு தர வேண்டியுள்ளது. ஆனால், கடந்த 8 மாதங்களாக பல முறை கேட்டும் அந்த தொகையை தராமல் அவர்கள் இழுத்தடித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்த தகவலில் கூறப்பட்டிருக்கிறது. |