மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கும் "முகமூடி" படத்தில், வில்லனாக நடிக்கிறார் "அஞ்சாதே" புகழ் நரேன். "சித்திரம் பேசுதடி" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நரேன். அதன்பிறகு டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த "அஞ்சாதே" படத்தின் மூலம் பிரபலமானார். இருந்தும் அதன்பிறகு வெளிவந்த "தம்பிக்கோட்டை" படம் அவருக்கு சொல்லும்படியாக அமையவில்லை. இந்நிலையில் மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இம்முறை ஹீரோ வேடம் அல்ல, வில்லன் வேடம் தான்.
இதுகுறித்து நரேன் கூறியதாவது, அஞ்சாதே படத்திற்கு பிறகு மீண்டும் மிஷ்கின் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. முகமூடி படத்தில் என்னுடைய கேரக்டர் அருமையான கேரக்டர், அதுவும் வில்லன் கேரக்டர். வில்லனாக நடிப்பது இதுதான் முதல்முறை. ஒரு ஹீரோ வில்லனாக நடிப்பது மிகவும் கஷ்டம். இருந்தும் மிஷ்கின் மீதுள்ள நம்பிக்கையால் இந்தபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.