தற்போது "காதல் டூ கல்யாணம்" படத்தில் ஆர்யாவின் உடன்பிறப்பு நாயகன் சத்யா உடன் இணைந்து ரொமான்ஸ் பெண்ணாக நடித்துள்ளார்.சினிமா உலகில் திவ்யாவின் காதல் வாழ்க்கை பற்றி கவலை பட்டு விசாரித்துள்ளார்கள். திவ்யாவும் தனக்கு யாருடன் காதல் உறவு உள்ளது என்பதை தெளிவுப்படுத்தாமல் விட்டதால், பட வட்டாரம் குழம்பித் தவித்தது. பெங்களூருவில் உள்ள விளையட்டு மைதானத்தில் தனது ஆண் நண்பருடன் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தரிசனம் கொடுத்தாராம். என் ஆண் நண்பரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்தேன். அவர் போர்சுகல், ஜெனிவாவில் வாழும் தொழில் அதிபர் ரப்பெல். ஜெர்மன் - சுவிஸ் ரத்தம் அவர். அவரோட பெற்றோருக்கு எங்களின் நட்புறவை பற்றி தெரியும். எங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வார்கள். திருமண உறவில் இருவரும் இணைவோம். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளமாட்டோம். நான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்த பிறகு, திருமண வேலைகளில் இறங்குவோம் என்று திவ்யா கூறியுள்ளாராம். |