Wednesday, May 04, 2011
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கு ஏற்ற இந்திய மணப்பெண் காத்ரீனா கைப் தான் என்று பிரபல திருமண அமைப்புத்தளமான ஷாதி.காம் தெரிவித்துள்ளது.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மறைந்த டயானா ஆகியோரின் மூத்த மகனான வில்லியம்ஸ் ஆர்தர் பிலிப் லூயிஸ்க்கும், கதே மிடில்டனுக்கும் 29.04. அன்று திருமணம் நடைபெற்றது.லண்டனில் உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக இவர்களது திருமணம் நடந்தது.
உலகமே இவர்களது திருமணத்தை ஆவலாகவும், ஆச்சரியமாகவும் கண்டுகளித்த நிலையில் இளவரசர் வில்லியம்ஸ்க்கு ஏற்ற இந்திய மணப்பெண் பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்தான் என்று பிரபல திருமண அமைப்புத்தளமான ஷாதி.காம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக அந்த இணையதளம் 8000பேரிடம் நடத்திய கருத்து கணிப்பில் 75.3சதவீதம் பேர் காத்ரீனா கைப்புக்கும், 16.7சதவீதம் பேர் பிரியங்கா சோப்ராவுக்கும், 8சதவீதம் பேர் சோனாக்ஷி சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை ஷாதி.காம் இணையதளத்தின் தலைமை அதிகாரி கவுரவ் ராக்ஷித் தெரிவித்துள்ளார்.