Saturday, May 21, 2011
ஹிந்தித் திரையுலகில் அசின், தீபிகா படுகோனேவுக்கு இடையில் மோதல் நிலவுவதாக கிசுகிசு செய்திகள் பரவியுள்ளன. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கு என்பதை அறிய நாம் அசினை ஃபோனில் தொடர்பு கொண்டபோது,
""சக நடிகர், நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகாவுக்கும் எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்ந்தவளா? நான் உயர்ந்தவளா? என்ற சிந்தனையெல்லாம் எங்களுக்குள் எழுந்ததே இல்லை. அது மாதிரி என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைந்து நிறைய காதல் கிசுகிசுக்கள் வருகின்றன.
அதிலும் உண்மையில்லை. நான் இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலிக்கிறேன் என்றால் அதை வெளிப்படையாக கூறுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அக்ஷய்குமாருடன் "ஹவுஸ்ஃபுல்-2' படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில ஹிந்திப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை'' என்று மனம் திறந்தார் அசின்!