

ரம்யா கிருஷ்ணனின் கணவரான வம்சி கிருஷ்ணா தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் திரிஷா நடிக்கிறார் என்று ஊடகங்களில் வந்த செய்தியை திரிஷாவின் அம்மா மறுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்தாவது, இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. இப்படம் குறித்து யாரும் திரிஷாவிடம் பேசவில்லை. திரிஷாவைப் பற்றி வரும் மற்ற செய்திகளைப் போலத்தான் இச்செய்தியும். இதை நம்ப வேண்டாம் என்றார்.
திரிஷா தற்போது மங்காத்தா படத்திலும், காவலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பாடிகார்ட் படத்திலும் நடித்து வருகிறார். வேறு எந்த புதுப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார் திரிஷா.