Thursday, June 16, 2011
டைரக்டர் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் புதிய சர்ச்சையில் சி்க்கியிருக்கிறது. நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில் வெளியானாலும் அந்த படம் ஏதோஒரு மொழியின் தழுவல் என்று சர்ச்சையை கிளப்புவதற்கென்றே சினிமாவில் சிலர் இருக்கிறார்கள். அப்படியொரு சர்ச்சையில்தான் இப்போது மங்காத்தா சிக்கியிருக்கிறது. சரோஜா படம் ரீலிஸ் ஆனபோது அந்த படம் பேபல் என்ற படத்தின் தழுவல் என்று கூறப்பட்டது. அதனை மறுக்காத வெங்கட்பிரபு, பேபல் படத்தின் ஸ்கிரீன்ப்ளேயின் பாதிப்பிலேயே சரோஜா திரைக்கதையை அமைத்தேன் என்று கூறினார்.