Saturday, June 11, 2011
டாப்ஸி. தற்போது ஜீவாவுடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்புவும், டாப்ஸியும் அடிக்கடி சந்திப்பதாகவும் நெருக்கமாக பழகுவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. இதற்கு பதில் அளித்து டாப்ஸி கூறியதாவது:- என் சொந்த விஷயங்களை பிறர் அலசுவது எனக்கு பிடிக்காது. என் தனிமையை நான் விரும்புகிறேன். அதற்கு மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். சிம்புவுடன் இணைத்து கிசுகிசுக்கின்றனர். மகத் என்பவருடனும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர்கள் எனது நல்ல நண்பர்கள். தெலுங்கில் என்னுடன் நடித்த மனோஜ் இந்த இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். சென்னை வரும்போது அவர்களை சந்திக்கிறேன். அவர்களை சந்திப்பது தவறா? எனக்கு இது போன்ற செய்திகளை படிப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் என் பெற்றோர் சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவர்கள். அவர்கள் இதை கேள்விப்படும் போது அதிர்ச்சியாகிறார்கள். உறவினர்களும் அது போலவே சங்கடப்படுகின்றனர். இவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.