Saturday, June 11, 2011
நடிகர் விஜய் சீனா செல்லவிருக்கிறார். இந்த பயணம் புதுப்பட சூட்டிங்கிற்காகவோ, புதுப்பட டிஷ்கஷனுக்காகவோ இல்லை. பல்வேறு அரட்டல், உருட்டல், மிரட்டல்களுக்கு இடையே சமீபத்தில் திரைக்கு வந்த காவலன் படத்திற்காக. ஆம்! சீனாவில் நடைபெறும் ஷாங்காய் திரைப்பட விழாவில் காவலன் படமும் கலந்து கொள்ளவிருக்கிறது. படம் திரையிடும் நேரத்தில் அங்கு இருந்தால் சந்தோஷமாக இருக்கும் என நினைத்த விஜய், சீனா புறப்பட் தயாராகி விட்டார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய்க்கு சிறப்பு ஒன்றும் காத்திருக்கிறதாம். உலக அரங்கம் காவலன் படத்தின் பெருமைகளை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் உள்ளூரில் ஒரே அடிதடியாக இருக்கிறது. இப்படத்தின் பண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, தயாரிப்பளார் ஷக்தி சிதம்பரம் மீது போலீசில் புகார் செய்திருப்பது, அதனைத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் குழப்பம் என காவலன் பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.