Saturday, 11 June 2011
பிரபுதேவா-நயன்தாரா உறவில் விரிசல்.
Saturday, June 11, 2011
பிரபுதேவாவை நயன்தாரா திருமணம் செய்து கொள்கிறார் என்ற செய்தி ஆண்டு கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.ஆனால் திருமணம் நடந்தபாட்டைக் காணோம்.சினிமா உலகைச் சேர்ந்த சில நடிகர்கள் அதுவும் சிம்பு போன்றோர் நயன்தாராவை ஏகத்திற்கும் கிண்டல் செய்து வருகின்றனர்.இவரையாவது பிரபு தேவா திருமணம் செய்து கொள்வதாவது என நக்கல் செய்து வருகின்றனர். இந்த செய்தி நயன்தாரா காதுகளுக்கு சென்றுவிட தற்பொழுது கொதித்துக் கொண்டிருக்கிறார் நயன்.
அதே சமயம் ஊர் வாயை மூட பிரபு தேவா உடனடியாக தன்னை மனைவியாக்க வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.ஆனால் பிரபு தேவாவோ இதோ அதோ என ஏதேதோ காரணங்களை சொல்லி இழுத்தடித்து வருகிறாராம். இதனால் உள்ளுக்குள் பிரபுதேவா-நயன்தாரா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.