மதராசபட்டணத்தில் ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட லண்டன் அழகி எமி ஜாக்சன்,முதல் முறையாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.திலீப் நாயகனாக நடிக்க, லால் ஜோஸ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஸ்பானிஷ் மசாலா என பெயரிட்டுள்ளனர். இன்னொரு ஹீரோவாக குஞ்சக்கோ போபன் நடிக்கிறார்.
ஸ்பானிஷ் பெண்ணாக நடிக்க பொருத்தமான நடிகையை கடந்த சில மாதங்களாகத் தேடி வந்த லால் ஜோஸ், எமியைப் பார்த்ததும் முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.ஆனால் ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை ஏற்பதா மறுப்பதா என்று புரியவில்லையாம் எமிக்கு. காரணம் தமிழில் பெரிய படத்தில் நடித்து, நல்ல பெயர் இருக்கும் போது, மலையாளத்துக்குப் போனால் மார்க்கெட் மதிப்பு இறங்கிவிடுமே என பயந்திருக்கிறார். ஆனால் பெரிய சம்பளம் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்கள்.எமி ஜாக்ஸன் இப்போது இந்தியில் கவும்தம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா வேடத்தில் நடித்து