நடிகை காஜல் அகர்வால் சென்னையில் நிரந்தரமாக தங்குவதற்கு வீடு தேடிக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கு திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகைகளான இலியானாவும், காஜல் அகர்வாலும் இப்போது தமிழ் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். முதலாமவர் ஏற்கனவே கோடம்பாக்கத்தை ஒரு ரவுண்டு அடித்து சில முக்கிய படங்களின் வாய்ப்புகளை பெற்றாகி விட்டது. காஜல் அகர்வாலும் தன் பங்கிற்கு திரையுலக முக்கிய புள்ளிகள் சிலருக்கு சைலண்ட்டாக பார்ட்டி கொடுத்து வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்த காஜலுக்கு இப்போது நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதாம். தமன்னா புதிய தமிழ்சினிமா எதிலும் ஒப்பந்தமாகாததால் அந்த இடம் காலியாக இருக்கிறது. எனவே அந்த இடத்தை பிடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் காஜல். தமிழல் நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் காஜல், தற்போது கேவி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.கதை கேட்பதற்கு, சூட்டிங்கிற்கு என அடிக்கடி சென்னைக்கு பறந்து வந்து கொண்டிருக்கும் அம்மணி, நிரந்தரமாக சென்னையிலேயே குடியேற விரும்புகிறார். அதனால் சென்னையில் வாடகைக்கு வீடு தேடும் பணிகளையும் முடுக்கி விட்டிருக்கிறாராம் காஜல்.தமிழில் எப்படியாவது முதலிடத்தை பிடித்துவிட வேண்டும் என எத்தனையோ நடிகைகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வரிசையில் நடிகை காஜலும் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.