Wednesday, June 22, 2011
மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’ படத்தில் ஜீவா, ஹீரோவாக நடிக்கிறார். ‘கோ’ ஹிட்டுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார் ஜீவா. இதையடுத்து மிஷ்கின் இயக்கும் ‘முகமூடி’யில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதையான இதில் நரேன் இன்னொரு ஹீரோ. இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ரொமான்டிக் திரில்லர் படத்திலும் ஜீவா நடிக்கிறார். இதை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.