மீண்டும் ராணா படத்தை துவங்க ஒரு வருடம் ஆகலாம். அதனால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நடிகர் நடிகைகள் வேறு படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் போகலாம் என்று சுதந்திரம் கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். தீபிகா படுகோனேவில் துவங்கி, கடைசி ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வரைக்கும் இந்த சுதந்திரம் அப்ளை ஆவதால் அத்தனை பேரும் சந்தோஷத்தோடு சரிங்க என்று கூறியிருக்கிறார்களாம்.
இதற்கிடையில் ஒவ்வொரு நாளிதழ் நிருபர்களையும் வலிய வந்து தொடர்பு கொள்ளும் தனுஷ், ரஜினி சார் இன்னும் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். இதை உங்க பத்திரிகையில் செய்தியாக வெளியிடுங்க என்கிறார்.
ரஜினி விஷயமாக கேட்கலாம் என்று போன் அடித்தால் கூட அந்த அழைப்பை உதாசீனப்படுத்தி வந்த தனுஷ் திடீரென்று இப்படி வலிய வந்து பேசுவது ஏன் என்று குழம்பி போயிருக்கிறார்கள் நிருபர்கள். இருந்தாலும், அவர் சொன்ன செய்தியை அப்படியே அச்சு பிசகாமல் வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
அவரது பரப்புரைப்படி ஜுன் 14 ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினி.
Tuesday, 14 June 2011
ராணா படத்திலிருந்து நடிக நடிகைகளை விலக அனுமதி :கே.எஸ்.ரவிகுமார்.
Tuesday, June 14, 2011