Monday, July 11, 2011
நம்ம ஹீரோக்கள் மீது ரசிகைகளுக்குதான் எத்தனை எத்தனை மோகம்...? சமீபத்தில் சென்னை ஈ.சி.ஆர்., சாலையில் ஒரு விபத்து. ஒரு அதிவேக கார், முன்னால் டூ-விலரில் சென்ற இரண்டு இளம் பெண்கள் மீது மோதியதில், இளம் பெண்கள் இருவரும் சாலையில் விழுந்து சிராய்ப்பு காயங்களுடன் விழுந்த வேகத்தில் எழுந்திருக்கின்றனர். அதற்குள், அவர்கள் மீது மோதிய காரையும், பொது மக்கள் தடுத்து நிறுத்த, காருக்குள் இருந்து இறங்கிய வாலிபரை கண்டதும், காயம்பட்ட இளம்பெண்கள் இருவர் மட்டுமல்ல, பொதுமக்களும் ஆச்சர்யத்தில் ஆடிப்போய் அவரிடம் சண்டைபோடாமல் ஆட்டோகிராஃப் வாங்கி வழிந்திருக்கின்றனர்.