Saturday, July 02, 2011
ரஜினி பற்றி செய்திகள் வருவதும், அடுத்த வினாடியே அவரது குடும்பத்தினரில் யாராவது ஒருவர் அதை மறுப்பதுமாக ஓடிக் கொண்டிருக்கிறது கடந்த சில மாதங்கள். அக்குடும்பத்தின் லேட்டஸ்ட் மறுப்பு இதுதான். எங்கள் வீட்டில் எந்த வாஸ்து மாற்றமும் நாங்கள் செய்யவில்லை என்றார் லதா ரஜினி. ஆனால், வாஸ்துபடி ரஜினியின் வீடு மாற்றப்பட்டு வருகிறது என்பதை சம்பந்தப்பட்ட வாஸ்து நிபுணரே வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோவையை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணரான ரவிராஜ் என்பவரை ரஜினியின் குடும்பத்தினர் வணங்கும் சுவாமிஜி ஒருவர் அனுப்பி வைத்தாராம் ரஜினி வீட்டிற்கு. இது இப்போது நடந்ததல்ல. பாபா படம் தோல்வியடைந்த நேரத்தில் நடந்த சம்பவம். வந்தவர் சொன்ன மாற்றங்களில் ஒரு சிலவற்றை மட்டும் செய்துவிட்டு ஓய்ந்துவிட்டார்களாம் ரஜினி குடும்பத்தினர். அதன்பின் வெளிவந்த சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட். கிட்டதட்ட ரவிராஜை மறந்தே போனது ரஜினி குடும்பம்.
இப்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மீண்டும் சுவாமிஜியிடம் அட்வைஸ் கேட்கப்பட்டதாம். ரவிராஜை அனுப்பினேனே, அவர் சொன்னதை நீங்கள் செய்யவில்லையா என்றாராம் அவர். ஒரு சிலவற்றை மட்டுமே செய்ததாக ஒப்புக் கொண்டாராம் லதா. சில வாரங்களுக்கு முன் மீண்டும் சென்னை வந்த ரவிராஜ் சில மாற்றங்களை கூறியிருக்கிறாராம்.
ரஜினியின் படுக்கை அறையும், தியான அறையும் அருகருகில் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இரண்டு அறைகளையும் தற்போது இருக்கும் அளவை விட சற்று பெரிதுபடுத்த வேண்டும். பூஜையறையிலும் சில மாறுதல்களை செய்ய வேண்டும். வீட்டிற்கு வேறொரு கலரில் மார்பிள் பதிக்க வேண்டும். வீட்டின் பெயின்ட் கலரையும் மாற்ற வேண்டும் என்பதுதான் அவர் கூறிய மாற்றங்கள்.
இந்த எல்லா வேலைகளையும் செய்து முடிக்க தனியார் நிறுவனம் ஒன்று முன் வந்திருக்கிறது. இவர்கள் இந்த வேலையை செய்து முடிக்கவே இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறியிருப்பதால், ரஜினி சென்னை வருவதும் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப் போகும் போல தெரிகிறது..