Wednesday, June 22, 2011
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படம், ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’. ஜித்தன் ரமேஷ் ஹீரோ. சஞ்சிதா படுகோன், சுஹாசினி ஹீரோயின்கள். படத்தை இயக்கும் திருமலை கிஷோர் கூறியதாவது: ரமேஷ் தங்கை அகிலாவின் தோழி சஞ்சிதா. விடுமுறைக்காக ஊருக்கு வருகிறார். ரமேஷ் அவரை காதலிக்கிறார். ரமேஷின் பெற்றோர், சுஹாசினியை மணம் முடிக்க பேசுகின்றனர். திகைக்கும் ரமேஷ், பெற்றோர் பேச்சை மீற முடியாமல் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான் கதை. 12 வருடங்களுக்கு முன் திருப்பதி எஸ்.வி கல்லூரியில் நான் படித்தபோது, நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். சமீபத்தில் சிம்பு உட்பட பல இளம் ஹீரோக்கள் படம் பார்த்து ரமேஷின் நடிப்பை பாராட்டினர். இதுவரை ‘ஜித்தன் ரமேஷ்’ என்றவர்கள், இனி ‘பிள்ளையார் தெரு ரமேஷ்’ என்பார்கள். அந்தளவு சிறப்பாக நடித்துள்ளார். 24ம் தேதி ரிலீசாகிறது.