Wednesday, June 22, 2011
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தியாகராஜன் நடித்து வெள்ளி விழா கண்ட "மலையூர் மம்பட்டியான்" படம், மீண்டும் அவரது மகன் பிரசாந்த் நடிப்பில் "மம்பட்டியான்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. தியாகராஜனே படத்திற்கு டைரக்ஷன் பொறுப்பு ஏற்றிருக்கிறார். இப்படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக சரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானும், சில்க் நடிக்க வேடத்தில் மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஜெய்சங்கர் நடித்த வேடத்தில் பிரகாஷ் ராஜ், கவுண்டமணி வேடத்தில் வடிவேலு, சங்கிலி முருகன் நடித்த போலி மம்பட்டியான் வேடத்தில் ரியாஸ்கான், பண்ணையாராக செந்தாமரை நடித்த வேடத்தில் கோட்டா சீனிவாசராவ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.